சாதனை படிகள்

LEVEL 1

ஸ்ரத்தவான்

தரங்கள்:

1. சுறுசுறுப்பான பக்தராகவும், கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக தவறாமல் கலந்து கொண்டும், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்களுடன் சங்கத்தில் இருக்க முயற்சிப்பேன்.

2. அனுதினமும் குறைந்த பட்சம் ஒரு சுற்று ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்வேன்.

3. ஸ்ரீல பிரபுபாதருடைய புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கும் பகவான் கிருஷ்ணரின் போதனைகளை படிப்பேன்.

LEVEL 2

கிருஷ்ண சேவகர்

தரங்கள்:

1. கிருஷ்ண உணர்வின் கொள்கைகளைப் அர்ப்பணிப்புடன் பின்பற்றுவதன் மூலம், ஸ்ரீல பிரபுபாதரிடம் அடைக்கலம் பெறுதல்.

2. பகவான் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளுதல்.​

3. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கௌர பூர்ணிமா மற்றும் இதர வைஷ்ணவ பண்டிகைகளின் போது பகவான் கிருஷ்ணருக்கு நடைமுறையாக பக்தி தொண்டு செய்தல்.

4. அனுதினமும் நான்கு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.

5. மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை உண்பதை தவிர்த்து மற்ற உயிர்வாழிகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணம் கிருஷ்ண உணர்வு செயல்களை நிலைநிறுத்தல்.

LEVEL 3

கிருஷ்ண சாதகர்

தரங்கள்:

1. ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவரது பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் கீழ் பக்தி-யோகத்தை படிப்படியாகக் கற்று, பயிற்சி செய்வதன் மூலம், பக்தி மிகுந்த வாழ்க்கை முறையை வழிநடத்த அர்ப்பணிப்புடன் இருத்தல்.

2. ஸ்ரீல பிரபுபாதருடைய புத்தகங்களை படித்தல், வாராந்திர நிகழ்ச்சியில் முடிந்தவரை அடிக்கடி கலந்து கொள்ளுதல் (வாராந்திர பகவத்கீதை வகுப்பிலாவது தவறாது கலந்து கொள்ளுதல்).

3. பகவான் கிருஷ்ணரை இயன்றவரை இல்லத்தில் வழிபடுதல், பூஜை அறையை நிர்மாணித்தல், ஆரத்தி மற்றும் பகவானுக்கு நிவேதனம் செய்தல், புனிதமான துளசி தேவியை வழிபடுதல், மேலும் அனுதினமும் அதிகாலையில் எழுந்து அடிப்படை சாதனையை செய்தல்.

4. அனு தினமும் எட்டு முதல் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.

5. மாமிசம் உண்பது (மீன் மற்றும் முட்டை உட்பட), போதை (மதுபானங்கள் & புகைப்பிடித்தல்), சூதாட்டம் மற்றும் தகாத உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்த்து தூய்மையான, புனிதமான வாழ்க்கை வாழ்வது.

6. வைணவ நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஏகாதசி மற்றும் வைணவ பண்டிகை தினங்களில் விரதம் அனுஷ்டித்தல்.

LEVEL 4

ஸ்ரீல பிரபுபாத அஷ்ரயா

தரங்கள்:

1. கிருஷ்ண உணர்வின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதரின் தெய்வீக புகுவிடத்தை பெற அர்ப்பணிப்புடன் இருத்தல்.

2. கிருஷ்ண உணர்வை வலுவான நம்பிக்கையுடன் பயிற்சி செய்தல்.

3. அனு தினமும் குறைந்த பட்சம் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.​

4. Tமாமிசம் உண்ணுதல் (மீன், முட்டை, வெங்காயம், பூண்டு உட்பட), போதை வஸ்துக்கள் (காபி, டீ உட்பட), சூதாடுதல், தகாத உடலுறவு போன்ற பக்தித் தொண்டின் முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் கண்டிப்பாக தவிர்த்தல்.

5. ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை முறையாகப் படிப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வுத் தத்துவத்தின் அடிப்படைகளை நன்கு அறிந்து கிருஷ்ண உணர்வு கொள்கைகளை (அவரவரது திறனுக்கு ஏற்ப) மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தீவிரமாக ஈடுபடுதல்.

6. எளிமையாக இருப்பினும் சில பொறுப்பான சேவைகளை தொடர்ச்சியாக செய்தல்.

7. அதிகாலையில் எழுந்து முடிந்தவரை ஆலயத்தில் நடைபெறுவது போன்ற ஒரு திட்டத்தைப் பின்பற்றுதல். ​

8. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு ஸ்ரீமத் பாகவதம்/ஸ்ரீமத் பகவத் கீதை வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

LEVEL 5

ஸ்ரீ குரு சரண அஷ்ரயா

தரங்கள்:

​1. ஸ்ரீல பிரபுபாத அஸ்ரயா நிலைக்கு தேவைப்படும் தரநிலைகளை குறைந்த பட்சம் ஆறு மாத கால பயிற்சி செய்த பிறகு, தான் தேர்ந்தெடுத்த சீக்ஷா குருவின் பட்டியலிலிருந்து இஸ்கானின் அங்கீகரிக்கப்பட்ட தீக்சை குருவை தேர்ந்தெடுக்க வேண்டும். குருவை தேர்ந்தெடுக்க தேவையான நேரத்தை ஒருவர்‌ எடுத்துக் கொள்ளலாம்.

2. Note that six months is the minimum period, and one may take as much time as required to make this selection.​

3. ஒருவருடைய புத்தியை உபயோகித்து குருவை தேர்ந்தெடுப்பது தனி நபரின் பொறுப்பாகும்.

4.கோவில் தலைவர் அல்லது உயர்ந்த பக்தர்களிடத்தில் இதை பற்றி தெரியப்படுத்துவது.

5. இஸ்கானின் அதிகாரியால் நடத்தப்படும் எழுத்து தேர்வை எழுதுவது.

6. இஸ்கானின் அதிகாரியிடம் பரிந்துரைக் கடிதத்தை பெறுவது.

7. தான் தேர்ந்தெடுத்த குருவிடம் அனுமதி பெறுவது.