Bhakti Steps

A System for Encouraging Devotees by Recognizing their Chanting and Spiritual Standards.

Loading...
Loading...

பக்தி படிகள்

இது, ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தல், மற்றும் ஆன்மீக தர நிலைகளின் அடிப்படையில், பக்தர்களை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையாகும்.

பக்தி படிகள் என்றால் என்ன?

பக்தி படிகள் எனும் இந்த செயல்முறை, குழுவில் இருக்கும் பக்தர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தல், மற்றும் அவர்களது ஆன்மீக தர நிலைகளின் அடிப்படையில் அங்கீகரித்து, பக்தர்கள் குழுக்களை ஊக்குவிக்கிறது. பக்தர்கள் குழுவில் இருக்கும் பக்தர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுடைய பக்தி தொண்டை அதிகரிக்கவும், இந்த செயல் முறை பெரிய அளவில் உதவுகின்றது. கிருஷ்ண பக்தியில் முன்னேற்றம் அடைவதில் தீவிரமாக இருக்கும் பக்தர்களை அடையாளம் காண்பது என்னும் ஒரு அமைப்பையும் இது வழங்குகிறது. உங்களுடைய குழுக்களை உருவாக்குவது மற்றும் ஒருங்கிணைப்பது போன்றவை இதன் முக்கிய கருத்தாகும்.

பக்தி படிகள் எனும் இந்தத் திட்டத்தில் ஐந்து நிலைகள் உள்ளன, இது படிப்படியாக ஹரிநாம தீக்ஷை நிலை வரை ஒருவரை எடுத்துச் செல்லும். நிலைகள் சுருக்கமாக கீழே கொடுக்கப்படுகிறது:

ஸ்ரத்தவான் குறைந்தபட்சம் ஒரு சுற்று ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் உச்சாடனம் செய்வது மற்றும் ஸ்ரீல பிரபுபாதருடைய புத்தகங்களை படிப்பது.

கிருஷ்ண (அ) கௌர சேவகர் குறைந்தபட்சம் நான்கு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் உச்சாடனம் செய்வது, மாமிசம் (மீன், முட்டை) போன்றவற்றை தவிர்ப்பது, பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொள்வது, மேலும் ஒழுக்கக்கேடான செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கிருஷ்ண (அ) கௌர சாதகர் குறைந்தபட்சம் எட்டு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் உச்சாடனம் செய்வது, சாதன பக்தியை பயிற்சி செய்து பகவான் கிருஷ்ணரை இல்லத்தில் வழிபட்டு, பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். போதை வஸ்துக்கள், மாமிசம் உண்பது (மீன் & முட்டை உட்பட), சூதாட்டம் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உடலுறவு ஆகியவற்றிலிருந்து விலகி இருத்தல்.

ஸ்ரீல பிரபுபாத அஷ்ரயா குறைந்தபட்சம் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் உச்சாடனம் செய்வது, நான்கு விதிமுறைகளை பின்பற்றி, சாதனாவை முறையாக பயிற்சி செய்ய வேண்டும்.

ஸ்ரீ குரு சரண அஷ்ரயா ஸ்ரீல பிரபுபாத அஷ்ரயாவிற்கு இருக்கும் தர நிலைகளை குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும், மேலும் அதிக நம்பிக்கையுடன் இஸ்கானின் தீக்ஷை வழங்கும் ஆன்மீக குருவிடம் சரணடைதல்.

நன்மைகள்

அங்கீகாரம் பயிற்சி செய்யும் பக்தர் குழு அங்கத்தினர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும், தாங்கள் முன்னேறி வருவதையும் உணர்கிறார்கள். தங்கள் பக்தி முயற்சிகளுக்காக அவர்கள் பாராட்டப்படுவதாக உணர்கிறார்கள். இது, அவர்கள் மென்மேலும் முன்னேறுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

படிப்படியான முன்னேற்றம்பக்தி படிகள் எனும் இந்த செயல்முறை பக்தர் குழு அங்கத்தினர்களுக்கு சாதன பக்தியின் படிப்படியான அணுகுமுறையை வழங்குகிறது. நான்கு கட்டுப்பாடு விதிகள் மற்றும் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபம் செய்வது ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற முடியும் என்று கூறுவது தத்துவ ரீதியாக தவறாகும், இது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதில்லை. பெரும்பாலும் ஹரிநாம தீக்ஷைக்கு தேவைப்படும் தர நிலைகளை உடனடியாக மக்களால் ஒரு இலக்காக கொள்ள முடியாது. அடுத்த படிநிலையின் மீது மனதை நிலைநிறுத்துவது அவர்களுக்கு சுலபமானதாகும். ( ஒரு சுற்றிலிருந்து 4 சுற்றுகள், பிறகு 8 சுற்றுகள், சைவ உணவை உட்கொள்வதிலிருந்து கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே உண்பது போன்றவை)

நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் அல்ல – சில சமயங்களில் மக்கள் நன்கொடை கொடுத்தால் மட்டுமே ஆலயத்தின் உறுப்பினர்களால் பாராட்டப்படுவார்கள் என்று எண்ணுகிறார்கள். நன்கொடை கொடுக்க இயலாதவர்கள் இதனால் நிராகரிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். பக்திபடிகள் எனும் இந்த செயல்முறை எந்த ரீதியிலும் நன்கொடைகளுடன் தொடர்பு இல்லாததாக இருக்கிறது. இது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருந்தாலும் அனைவருக்கும் சுதந்திரமாக வழங்கப்படும் வாய்ப்பாகும்.

குறைபாடுகளைத் தடுக்கிறது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஹரிநாம தீக்ஷைக்கு என்று உயர்ந்த தர நிலைகளை ஸ்ரீல பிரபுபாதர் நிறுவினார். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வெளியே இருக்கும் நிறுவனங்களும், மடங்களும், தனிநபர்களும் இஸ்கான் பக்தர்குழு அங்கத்தினர்களிடம் வெறுமனே சில குறைந்த தரநிலைகளே ஹரிநாம தீக்ஷைக்கு உள்ளது என்று கூறி அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற மலிவான தீக்ஷை பக்தர் குழு அங்கத்தினர்களை கவர்ந்திழுக்கின்றன. பக்திபடிகள் எனும் இந்த செயல் முறையின் மூலம் பக்தர்குழு அங்கத்தினர்கள் அனைவருமே ஸ்ரீல பிரபுபாதருடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் என்ற உறுதியான எண்ணம் வளர்க்கப்படுகிறது. இஸ்கான் வழங்கும் இந்த பக்திப் படிகள் என்பதை ஏற்றுக்கொள்வதன் மூலம் இஸ்கானுடன் அவர்களின் தொடர்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

 

ஆளும் குழு ஆணையம் குறிப்புகள்

 

இஸ்கான் சட்ட புத்தகம், அத்தியாயம் 15

15.2 வழிகாட்டுதல்கள்:

15.2.1

பக்தர் குழு அங்கத்தினர்களை ஊக்குவிப்பது: சிக்ஷா விழா

1. இஸ்கான் தலைவர்கள் மற்றும் ஜிபிசி உறுப்பினர்கள் (இஸ்கான் தீக்ஷை வழங்கும் ஆன்மீக குருக்களைத் தவிர, அங்கீகரிக்கப்பட்ட குரு-ஆஸ்ரயா (புகலிடம்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆர்வமுள்ள சீடருக்கான விழாவைத் தவிர) அவர்கள் தங்கள் அதிகார பகுதிகளில், பகிரங்கமாக வழங்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தி சாதனைகள் மற்றும் சேவையில் முன்னேற்றத்திற்காக அதன் பக்தர் குழு உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

2. கோவில் மற்றும் பக்தர்குழு அமைப்புகள் ஆகியவை பக்தர்குழு அங்கத்தினர்களை அவர்களுடைய தரநிலைகளிலிருந்து உயர்த்துவது மற்றும் தரநிலைகளை உயர்த்தி கொள்வதற்கான தகுதிகள் பெறும் பயிற்சிகளை வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதில், அவரவர்களுடைய நிலைகளுக்கு ஏற்ப சாஸ்திர படிப்புகளை பரிந்துரை செய்வது (பெரியவர்களுக்கு கல்வி மற்றும் பக்தர்குழு பிரசங்க கண்காணிப்பாளர்கள் பரிந்துரைக்கலாம்.)

3. உலகம் முழுவதும் தரநிலை சான்றிதழ்கள் வழங்கப்படும். (பக்தர்குழுவின் பிரசங்க கண்காணிப்பாளருடன் கலந்தாலோசித்து தொடர்புடைய செயலாளரால் ஒரு அமைப்பின்படி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.)

4. பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றில் அங்கீகாரம் வழங்கப்படலாம் (இவற்றை வழங்குவது கட்டாயம் அல்ல, மேலும் உள்ளூர் நேரம், இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப விழா நடத்தப்படலாம்)

15.2.1.1

சத்சங்கி (அ) ஸ்ரத்தவான் - பகவான் சைதன்யரின் புனித கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுதல்
தகுதிகள்: பகவான் சைதன்யரின் புனித கட்டளைகளை ஏற்றுக் கொண்டு அணு தினமும் குறைந்த பட்சம் ஒரு சுற்று ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல், பகவான் கிருஷ்ணரை வழிபடுதல் ( ஆலயத்திற்கு செல்லுதல் அல்லது தன்னால் இயன்றவரை பக்தி சேவைகளை செய்தல்), பகவான் கிருஷ்ணரின் போதனைகளை (பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், மற்றும் ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய மற்ற புத்தகங்களை) படிப்பது.

குறிப்பு: இது ஸ்ரத்தா அல்லது சத்-சங்க பக்தி நிலைகளுடன் பரந்த அளவில் தொடர்புகொண்டவை என்பதால், அவை பொதுவாக “சத்-சங்கி” அல்லது “ஸ்ரத்தாவன்” என்று அழைக்கப்படலாம்.]

15.2.1.2

கிருஷ்ண (அ) கௌரங்க சேவகர்
தகுதிகள்: குறைந்தபட்சம் அனு தினமும் நான்கு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல், போதை வஸ்துக்களை தவிர்ப்பது, மாமிசம் மீன், முட்டை ஆகியவற்றைத் தவிர்ப்பது, பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்று நம்புதல், பக்தி மனப்பான்மை உடையவராக இருக்க வேண்டும், ஒழுக்கக்கேடான செயல்களைத் தவிர்த்தல் (போதை வஸ்துக்கள், பரத்தையர்த் தொழில் போன்றவை தவிர்க்கப்படவேண்டும்)

15.2.1.3

கிருஷ்ண (அ) கௌரங்க சாதகர்

தகுதிகள்: குறைந்தபட்சம் அனு தினமும் எட்டு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல், போதை வஸ்துக்களை தவிர்ப்பது, மாமிசம் மீன், முட்டை ஆகியவற்றைத் தவிர்ப்பது, சுதாடாமல் இருப்பது, தகாத உடலுறவு கொள்ளாதிருத்தல், பகவானுக்கு நிவேதனம் செய்தல், இல்லத்தில் பகவானுக்கென்று ஒரு பூஜையறையை நிர்மாணிப்பது, மேலும் பொதுவாக சாதன பக்தி செயல் முறையை ஏற்றுக் கொள்ளுதல்.

15.2.1.4

ஸ்ரீல பிரபுபாத ஆஸ்ரயா

தகுதிகள்: ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கான் உறுப்பினர்களுக்கு கிருஷ்ண உணர்வு சம்பந்தமான குறைந்தபட்ச தரநிலைகளை பயிற்சி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் அனு தினமும் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல், போதை வஸ்துகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது, மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றைத் தவிர்த்தல், சூதாடாமல் இருத்தல், தகாத உடலுறவு கொள்ளாமல் இருத்தல், மேலும் கிருஷ்ண உணர்வில் வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துவது.

15.2.1.5

ஸ்ரீ குரு சரணம் ஆஸ்ரயா
தகுதிகள்: ஸ்ரீல பிரபுபாத அஷ்ரயா படிநிலையில் இருக்கும் அதே விஷயங்களை அதிக நம்பிக்கையுடன் கடைபிடிப்பதுடன் குரு சீடப் பரம்பரையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மீக குருவை ஏற்றுக் கொள்ளுதல். ஸ்ரீல பிரபுபாத அஷ்ரயா தரநிலைகளை குறைந்தபட்சம் ஆறு மாதம் கடைப்பிடித்து இருக்க வேண்டும். இஸ்கான் சட்டத்தின் படி அவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி அடைய வேண்டும்.