ஸ்தாபக-ஆச்சாரியர்
Srila Prabhupada Biography
COPYRIGHT NOTICE:
This is an evaluation copy of the printed version of this book, and is NOT FOR RESALE. This evaluation copy is intended for personal non-commercial use only, under the “fair use” guidelines established by international copyright laws. You may use this electronic file to evaluate the printed version of this book, for your own private use, or for short excerpts used in academic works, research, student papers, presentations, and the like
பல்லாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த கலாச்சாரமான பக்தியோகம் அல்லது கிருஷ்ண உணர்வின் போதனைகள் அனைத்தும் இந்தியாவின் எல்லைகளுக்குள் மறைக்கப்பட்டிருந்தது. இன்று, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் காலவரம்பற்ற பக்தியின் ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்தியதற்காக ஸ்ரீல பிரபுபாதருக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 1, 1986 அன்று கல்கத்தாவில் அபய சரண் தே என்ற பெயருடன் ஜனித்தார். ஒரு இளைஞனாக அவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். 1922 ஆம் ஆண்டு, தேர்ந்த பண்டிதரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதியை சந்தித்தது இளைஞரான அபையின் எதிர்காலம் குறித்து ஆளுமை மிகுந்த கொண்ட சந்திப்பு என்பதை நிரூபித்தது.
ஸ்ரீல பக்தி சித்தாந்தா, கௌடிய வைஷ்ணவ சமூகத்தின் ஒரு தலைவராக இருந்தார், இது பரந்த இந்து கலாச்சாரத்திற்குள் ஒரு ஏகத்துவ பாரம்பரியமாகும். அவர்களின் முதல் சந்திப்பிலேயே பகவான் கிருஷ்ணருடைய போதனைகளை ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்லும் படி ஸ்ரீல பக்தி சித்தாந்தா, அபையிடம் கூறினார். அவருடைய பக்தி மற்றும் ஞானத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அபய சரண் தே 1933 ஆம் ஆண்டு ஸ்ரீல பக்தி சித்தாந்தாவின் சீடனாகி அவரது வழிகாட்டியின் கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானித்தார். அதன் பிறகு, அபை அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவாக மரியாதை நிமித்தத்துடன் அறியப்பட்டார், அதனை அடுத்து 32 வருட காலம் மேற்கத்திய நாடுகளை நோக்கிய தனது பயணத்திற்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு தனது 69 ஆவது அகவையில் ஸ்ரீல பிரபுபாதர் மன்றாடி இலவச பயணச்சீட்டு ஒன்றை பெற்று ஜலதூதா எனும் சரக்கு கப்பலில் பயணம் செய்து நியூயார்க் நகரை அடைந்தார். பயணத்தின்போது இரண்டு மாரடைப்புகள் அவருக்கு ஏற்பட்டது நம்பத் தகாத விஷயங்கள் என்பதை நிரூபித்தது. கடல் வழியாக சுமார் 35 தினங்கள் பயணத்திற்கு பிறகு, அவர் இந்திய ருபாய் மதிப்பில் ஏழு டாலர்கள் மற்றும் புனித சமஸ்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புகளின் ஒரு பெட்டியுடன் தனிமையான புரூக்ளின் கப்பல்துறைக்கு முதன் முதலாக வந்து சேர்ந்தார்.
நியூயார்க்கில், அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார், மர நிழல் நிறைந்த டாம்ப்கின்ஸ் ஸ்கொயர் பூங்காவில் பணிவுடன் பகவத் கீதையின் சொற்பொழிவுகளையும், கீர்த்தனைககளையும் செய்ததன் (பாரம்பரிய ஆன்மீக கீர்த்தனைகள்) மூலம் தனது சேவையை (இயக்கத்தை) தொடங்கினார். அமைதி மற்றும் நல்லெண்ணம் பற்றிய அவரது செய்தி இளைஞர்கள் பலரிடம் எதிரொலித்தது, அவர்களில் சிலர் கிருஷ்ண பக்தி பாரம்பரியத்தின் தீவிர மாணவர்களாக மாற முன்வந்தனர். இந்த மாணவர்களின் உதவியுடன், பக்தி வேதாந்த ஸ்வாமி நியூயார்க்கின் கீழ் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய கடை முகப்பைக் கோயிலாகப் பயன்படுத்த முடிவு செய்து வாடகைக்கு எடுத்தார்.
1966 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பக்திவேதாந்த ஸ்வாமி, “இவ்வுலகில் உள்ள மதிப்புகளின் ஏற்றத்தாழ்வுகளை சரிபார்த்து உண்மையான ஒற்றுமை மற்றும் அமைதிக்காக பணியாற்றதல்” எனும் நோக்கத்திற்காக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கானை) (ISKCON) நிறுவினார்.
பகவான் கிருஷ்ணருடைய போதனைகளை தனது சொற்பொழிவுகளின் மூலம் மேற்கத்திய நாடுகளில் பரப்புவதற்காக ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகை 14 முறை வலம் வந்தார். அவர் ஏந்தி வந்த செய்தியை ஏற்க அனைத்துப் பின்னணிகளை மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்களும், ஆண்களும் பெண்களும் முன் வந்தனர். அவர்களது உதவியுடன் ஸ்ரீல பிரபுபாதர் ஆலயங்கள், விவசாய பண்ணை சமூகங்கள், புத்தக பதிப்பகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை உலகெங்கிலும் நிறுவினார்.
இந்த கிருஷ்ண உணர்வு தோன்றிய ஸ்தலத்தில் மேலும் அதனுடைய வேர்களுக்கு ஊட்டமளிக்கும் விருப்பத்தைக் கொண்டு ஸ்ரீல பிரபுபாதர் பல முறை மீண்டும் இந்தியாவுக்கு வருகை புரிந்து வைஷ்ணவ மரபில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தியாவில், அவர் புண்ணிய ஸ்தலங்களான விருந்தாவனம் மற்றும் மாயாபூரில் உள்ள பெரிய மையங்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆலயங்களை நிர்மாணித்தார்.
ஒருவேளை, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களே அவருடைய மிக முக்கியமான பங்களிப்புகளாக இருக்கலாம். அவர் கிருஷ்ண பாரம்பரியத்தில் 70 க்கும் மேற்பட்ட தொகுப்புகளை எழுதியுள்ளார், அந்தப் புத்தகங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம், ஆழம், பாரம்பரியத்தின் நம்பிக்கை மற்றும் தெளிவாக இயற்றப்பட்ட விதம் அறிஞர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றன. அவரது பல புத்தகங்கள் பல கல்லூரி பட்டப்படிப்பு கல்வியில் பாடப்புத்தகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவரது எல்லா புத்தகங்களும் 76 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது மிக முக்கியமான படைப்புகள்: பகவத் கீதை உண்மையுருவில், 30 தொகுதிகள் கொண்ட ஸ்ரீமத்-பாகவதம் மற்றும் 17-தொகுதிகள் கொண்ட ஸ்ரீ சைதன்ய-சரிதாமிருதம் ஆகியவை ஆகும்.
1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர் புண்ணிய ஸ்தலமான விருந்தாவனத்தில், தனது கட்டளைகளை இன்றும் நிறைவேற்றி வரும் அவரது அன்பான சீடர்களால் சூழப்பட்திருந்த போது இவ்வுலகை நீத்தார்.
Source: www.iskcon.org