ஸ்ரீல பிரபுபாத அஸ்ரயா
1. கிருஷ்ண உணர்வின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதரின் தெய்வீக புகுவிடத்தை பெற அர்ப்பணிப்புடன் இருத்தல்.
2. கிருஷ்ண உணர்வை வலுவான நம்பிக்கையுடன் பயிற்சி செய்தல்.
3. அனு தினமும் குறைந்த பட்சம் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.
4. மாமிசம் உண்ணுதல் (மீன், முட்டை, வெங்காயம், பூண்டு உட்பட), போதை வஸ்துக்கள் (காபி, டீ உட்பட), சூதாடுதல், தகாத உடலுறவு போன்ற பக்தித் தொண்டின் முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் கண்டிப்பாக தவிர்த்தல்.
5. ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை முறையாகப் படிப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வுத் தத்துவத்தின் அடிப்படைகளை நன்கு அறிந்து கிருஷ்ண உணர்வு கொள்கைகளை (அவரவரது திறனுக்கு ஏற்ப) மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தீவிரமாக ஈடுபடுதல்.
6. எளிமையாக இருப்பினும் சில பொறுப்பான சேவைகளை தொடர்ச்சியாக செய்தல்.
7. அதிகாலையில் எழுந்து முடிந்தவரை ஆலயத்தில் நடைபெறுவது போன்ற ஒரு திட்டத்தைப் பின்பற்றுதல்.
8. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு ஸ்ரீமத் பாகவதம்/ஸ்ரீமத் பகவத் கீதை வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.