கிருஷ்ண சாதகர்
- ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவரது பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் கீழ் பக்தி-யோகத்தை படிப்படியாகக் கற்று, பயிற்சி செய்வதன் மூலம், பக்தி மிகுந்த வாழ்க்கை முறையை வழிநடத்த அர்ப்பணிப்புடன் இருத்தல்.
- ஸ்ரீல பிரபுபாதருடைய புத்தகங்களை படித்தல், வாராந்திர நிகழ்ச்சியில் முடிந்தவரை அடிக்கடி கலந்து கொள்ளுதல் (வாராந்திர பகவத்கீதை வகுப்பிலாவது தவறாது கலந்து கொள்ளுதல்).
- பகவான் கிருஷ்ணரை இயன்றவரை இல்லத்தில் வழிபடுதல், பூஜை அறையை நிர்மாணித்தல், ஆரத்தி மற்றும் பகவானுக்கு நிவேதனம் செய்தல், புனிதமான துளசி தேவியை வழிபடுதல், மேலும் அனுதினமும் அதிகாலையில் எழுந்து அடிப்படை சாதனையை செய்தல்.
- அனு தினமும் எட்டு முதல் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.
- மாமிசம் உண்பது (மீன் மற்றும் முட்டை உட்பட), போதை (மதுபானங்கள் & புகைப்பிடித்தல்), சூதாட்டம் மற்றும் தகாத உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்த்து தூய்மையான, புனிதமான வாழ்க்கை வாழ்வது.
- வைணவ நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஏகாதசி மற்றும் வைணவ பண்டிகை தினங்களில் விரதம் அனுஷ்டித்தல்.
பாடல்கள்
துளசி ஆரத்தி
குரு அஷ்டகம் (சம்சார தாவா)
கௌர ஆரத்தி
பயிற்சி
எட்டு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம்
பகவானுக்கு ஆலயம் அமைத்தல்
ஏகாதசி மற்றும் பண்டிகை நாட்களில் விரதம் இருத்தல்
புத்தகங்கள்
பிரஹலாதரின் திவ்ய உபதேசங்கள்
மறுபிறவி
நாகரிகம் மற்றும் ஆழ்நிலை
கூடுதல் புத்தகங்கள்
கிருஷ்ணா
பகவத் கீதை உண்மையுருவில்
இயற்கையின் சட்டங்கள்
சந்தேகம் மற்றும் மாயைக்கு அப்பால்
பிராந்திய தேவைகளின் அடிப்படையில் மேலும் தெளிவு பெற, உங்கள் உள்ளூர் அதிகாரியுடன் கலந்துரையாடவும்