இஸ்கானின் எழு நோக்கங்கள்
ஸ்ரீல பிரபுபாதா, 1966 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்கானை (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஸ்தாபித்தார். அச்சமயம் ஸ்ரீல பிரபுபாதா, இஸ்கான் நிறுவன ஆவணத்தில் இஸ்கானின் ஏழு குறிக்கோள்களை குறிப்பிட்டிருந்தார்:
(1) உலகில் உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்படவும், வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பை உணராமல் செயல்படுவதை தவிர்க்கவும், ஆன்மீக ஞானத்தை முறைப்படி பரப்பி, ஆன்மீக வாழ்க்கையின் நுணுக்கங்களை பற்றி மக்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பது.
(2) பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பகவான் கிருஷ்ணரை பற்றிய உணர்வை பிரச்சாரம் செய்வது.
(3) இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமானவர்களாக மாற்றுவது, இதன் மூலமாக உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தினரிடையே தாம் ஒவ்வொருவரும் ஆத்மா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வது.
(4) பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களின் படி வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பகவானின் புனித நாமத்தை ஒன்று கூடி பக்தர் குழுக்களாக ஜபம் செய்யும் சங்கீர்த்தன இயக்கத்தை எடுத்துரைத்து ஊக்குவித்தல்.
(5) உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்திற்காக பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட மற்றும் பகவானின் லீலைகள் அடங்கிய புனித ஸ்தலத்தை நிர்மாணித்தல்.
(6) எளிமையான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது என எடுத்துரைக்க உறுப்பினர்களை நெருக்கமாக ஒருங்கிணைப்பது.
(7) மேற்கூறிய நோக்கங்கள் அனைத்தையும் அடையும் நோக்கத்தில், பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்கள் மற்றும் பிற புத்தக வெளியீடுகளை பிரசுரித்து விநியோகிக்க வேண்டும்.
Source: www.iskcon.org