பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு மற்றும் ஸ்ரீல பக்திவினோத தாக்குரா ஆகியோரால் கற்பனை செய்யப்பட்டபடி, உலக அளவில் பக்தர் குழு பிரச்சாரத்தை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர் துவக்கினார்.
தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜர், இஸ்கானின் பயிற்சி, கல்வி மற்றும் இதர ஆதரவு அமைப்புகள் மூலம் பக்தர் குழு பிரச்சாரத்தில் உலகெங்கிலும் ஈடுபட்டுள்ள பக்தர்களை ஆதரிப்பதற்கான உத்வேகத்தின் மூலமாகவும், ஒரு கருவியாகவும் இந்த பக்தர் குழு மேம்பாட்டு அமைச்சகத்தை தொடங்கினார்.
இன்று, பக்தர் குழு பிரச்சாரகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தலைவர்களுடன் சர்வதேச அளவில் அமைச்சகம் ஒன்றிணைந்து பக்தர் குழுக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.